BREAKING NEWS
latest

Featured Post

இரகசிய அறிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு

இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ச...

Latest Articles

Saturday, December 14, 2019

இரகசிய அறிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு

இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தின் பரிசோதகர் நிஷாந்த சில்வா மேற்கொண்ட விசாரணை அறிக்கைகளே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இரகசிய அறிக்கைகளை மனித உரிமை ஆணைக்குழுவில் தான் கண்டதாக முன்னாள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் ஏற்றுக் கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் அது தொடர்பில் எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பான இரகசிய ஆவணம் முதலில் ஜெனீவாவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்பான 100 இரகசிய ஆவணங்கள் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகாவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Wednesday, May 29, 2019

தமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் மகிழ்வுற்றனர்

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை யார் நினைத்தாலும் இனி பிரிக்க முடி யாது என யாழ்ப்பாண முஸ்லிம் சிவில் அமைப்புத் தெரிவித்துள்ளது.

மேற்போந்த கருத்தைக் கேட்கும்போது, அழுவதா அல்லது சிரிப்பதா என்று புரிய வில்லை.

இதை நாம் கூறும்போது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்து இது என்று சிலர் கருதலாம்.

ஆனால் எந்த வகையிலும் இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தன்று.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற் கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்த கையோடு அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என முதலில் குரல் கொடுத்ததில் வலம்புரிக்குப் பெரும் பங்கு உண்டு.

இப்போதும் நாம் கூறுவது; தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியது ஒரு குழுமம் அல்லது ஒரு கூட்டமாகவே இருக்க முடியும்.

இதைவிடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்து வதும் அவர்களுக்கு இடுக்கண் செய்வதுமான செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்று மையாக வாழவேண்டும் என நினைக்கின்ற முஸ்லிம் சகோதரர்கள் இருக்கின்றார்கள்.

வன்னி யுத்தம் நடந்தபோது, தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை கண்டு துடித்த இஸ்லாமிய சோதரர்கள் நிறைய உளர்.

அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தனர். முஸ் லிம் சிவில் அமைப்புகள் வன்னி யுத்தத்தைக் கண்டித்தன என்று கூறுவது அடிப்படை நியாயமற்றது.

உண்மையில் வன்னி யுத்தம் நடந்தபோது, தமிழர்கள் கொல்லப்பட வேண்டும் என நினை த்த முஸ்லிம் அரசியல்வாதிகளே அதிகம்.

புலனாய்வுத் துறையில் சேர்ந்து தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்து, விசாரணை என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைக் கொடுமைப்படுத்தியவர்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் புலனாய்வாளர்கள்.

இந்த உண்மைகளை ஒருபோதும் மறக்க முடியாது மறக்கவும் கூடாது.
தவிர, கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை தமிழினத்தை அழிப்பதில் முஸ்லிம் இனத்தின் ஒரு தரப்பினர் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.

குறிப்பாக கிழக்கின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தமிழினத்துக்கு எதிராகச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல.

இதுவே உண்மை. இந்த உண்மைகள் சிலருக்குக் கசக்கலாம்.
யாருக்கெல்லாம் இந்த உண்மைகள் கசக் கின்றனவோ அவர்கள் இப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பலயீனப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்களும் தமிழினம் வாழ வேண் டும் என நினைக்கின்ற அருமந்த முஸ்லிம் சகோதரர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆக, தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டபோது ஆட்சியாளர்க ளுடன் நின்று கரகோசம் செய்த முஸ்லிம் அரசியல்வாதிகளை தமிழ் மக்கள்ஒருபோதும் மறக்கவும் மாட்டர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

இந்த உண்மையை சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில முஸ்லிம் அமைப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆம், தமிழ் பேசும் மக்களை இனி யாராலும் பிரிக்க முடியாது என்று கூறுவதெல்லாம் சூழ்நிலை மாற்றமேயன்றி யதார்த்தமன்று. 

Thursday, May 16, 2019

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிசாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (16ஆம் திகதி) விசாரணைக்கு எடுத்துக் கொளள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்கள அறிவுறுத்தலுக்கு அமைய இவர்களை சரீரப் பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு நீதவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் உணவக நடத்துநர் மீதான வழங்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
விசேட ​சோதனை நடவடிக்கையின்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோர் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் அணிதிரள அழைப்பு!

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகள் இறுதி கட்டத்தை எய்தியுள்ளது.


நினைவு முற்ற வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 18 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மிகவும் அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

அனைவரையும் திரண்டு அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பும் இன்று மதியம் விடுக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 15, 2019

கைதான மாணவர்களுக்காக திரண்டெழுந்தது யாழ் பல்கலைக்கழகம்!பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோரது விடுதலையினை இலங்கை அரசு திட்டமிட்டு இழுத்தடிக்கின்ற நிலையில் அவர்கள் மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் காலை 9 மணிக்கு இடம்பெற்றது. மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்ட மா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினர்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. 

அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டி சாலையில் திலீபனின் படம் ஒட்டப்பட்டு இருந்துள்ளது.

 அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் சிற்றுண்டி சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார். 

 மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் சிற்றுண்டி சாலை நடத்துனரையும் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.